
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், லண்டன் Hayes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபொலின் அன்னலிங்கம் அவர்கள் 12-02-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல்பெர்னாண்டோ ஞானமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்னலிங்கம்(இளைப்பாறிய யாழ் போதனா வைத்தியசாலை காவலர்- லண்டன்) அவர்களின் அன்பு மனைவியும்,
லிங்ககுமார்(லண்டன்), லிஷாங்கி(பிரான்ஸ்), ஜராங்கனி(பிரான்ஸ்), அலஸ்ரின்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அஜிந்தா, ஞானதாசன், மனோகரன், மதனா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
காலஞ்சென்றவர்களான மாக்கிறேற்றம்மா, மேரிமெற்றலின், மேரிகத்தரின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தேவசகாயம், செபஸ்ரியாம்பிள்ளை மற்றும் நோவிட்ஜோர்ச், திருமதி பவளம் சுந்தரம் ஆகியோரின் மைத்துனியும்,
ஷிலக்ஷன், அருஷ்ஜா, ஜஷ்வியா, நிதுரா, சுருதிகா, நேந்திரி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
சாத்வீகன், கீர்த்திகா, அரவிந், கார்த்திகா, அலெக்ஷன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.