இன்று எங்கள் சின்னன்ரியின் இறுதியாத்திரை... ஞாயிறு 15:00மணி. 86 ஆண்டுகள் இம்மண்ணில் வாழ்ந்வர்.. எம் அன்னையோடு உடன்பிறந்தவர்.. எமக்கும் தாயானவர்.. எங்கள் வீடே உங்கள் முற்றம்.. உங்டள் வீடே எங்கள் முற்றம் .. சகோதரர் உறவே எங்கள் சுற்றம்.. எங்கள் உங்கள் சமையல்களே எங்கள் சாப்பாட்டுத் தட்டுகளில்... உங்கள் கிணறே எங்கள் குளி நீர்... எங்கள் குழாய்நீரே உங்கள் குடிநீர்.. ஆச்சி..அம்மா.. அன்ரி...பெரியம்மா.. சின்னன்ரி.. மாமா.. மலரன்ரி என ஒன்றுக்குள் ஒன்றாய் ஒற்றுமையாய் வாழ்ந்த்திருந்தோம். எங்கள் உங்கள் வளவுகளே எங்கள் விளையாட்டுமைதானம்.. அந்த பெருவளவின் நினைவுகளை.. பெருமைகளை நினைத்துப்பார்க்கின்றோம்... அவ்வளவில் உங்கள் வாழ்வுதனை எண்ணிப்பார்க்கின்றோம்...பிறப்பும்.. வாழ்வும்.. இறப்பும் அங்கேயே உங்களுக்கு.. வருவோரை வரவேற்று வயிறாற உணவளித்து.. வழிச்செலவுங் கொடுக்கின்ற வள்ளன்மை... கேட்பவர்க்கு கொடுத்துவிட்டு ஏமாந்து காலகாலமாய் கேட்டு அலைகின்ற அவலங்கள்.. எல்லாம் எம் கண்முன்னால் நடந்ததுதான்.. இன்னும் சொல்லவும் நினைக்கவும் பலபலவுண்டு.. சென்று வாழுங்கள் வான்வீட்டில்.. காலம் காலமாய் நாம் உங்களை தாங்குவோம் எம் நினைவேட்டில்.. அந்நினைவுகளில் வரும் எங்கள் நினைவூட்டல்.. இறைவா எங்கள் சின்னன்ரியின் வாழ்வில் அவருக்கும் எங்களுக்கும் செய்ய நன்மைகளுக்காக உமக்கு நன்றியும்.. ஸ்தோத்திரமும்.. இவரை உமது திருவடிநிழலில் ஒப்படைக்கிறோம்.. முடிவில்லா வாழ்வை இவருக்கு அளித்தருளும்.
Rest IN Peace