யாழ். பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கொய்யாத்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசேப்பின் அந்தோனிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அம்மா என்று அழைக்காத உயிரில்லையே..
அம்மாவின் அன்பிற்கு நிகரில்லையே..
அம்மா நாம் உம்மை நினைக்காத நாளில்லையே..
எம்மை பெற்றெடுத்த நீங்கள் எங்கள் தெய்வம் தெய்வம்..
நீங்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் நாம்
என்றும் உங்கள் செல்வம் செல்வம்..
இப்போது எங்கள் தெய்வத்தை இறையாம்
உயர் தெய்வத்துள் வைத்துவிட்டோம்...
உம்மால் உயிர்பெற்று.. உடல்பெற்று..
உலக வாழ்வுபெற்று.. உய்த்திருந்தோம்...
இன்றோ உம்மை இழந்ததினால்
எல்லாம் மாயை என்று பொய்த்துப்போனோம்..
நீங்கள் மெய்யான நிலைவாழ்வில் நிலைத்துவிட்டீர்...
உங்கள் வாழ்வில் நல்ல ஓட்டத்தை ஓடி முடித்துவிட்டீர்..
முடிவில்லா விண்ணரசில் விண்மீனாய் ஒளிருகின்றீர்...
விண்ணவரும் மண்ணவரும் மகிழ்ந்திருக்க
விண்ணக தந்தையிடம் விடாது ஜெபிக்கின்றோம்...
எங்கள் அம்மாவின்.. மாமியின்.. அம்மம்மாவின்.. அப்பம்மாவின் பிரிவுத்துயரில் எம்முடன் கலந்திருந்த அனைவருக்கும்
எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
தகவல் பிள்ளைகள்..
Rest IN Peace