அம்மா உந்தன் அன்பினிலே.. தாய்ப்பறவை மூச்சிழந்தது... சேய்ப்பறவை பேச்சிழந்தது... உயிர்தந்து... உடல் தந்து... அன்பு தந்து... அறிவு தந்து... இவ்வுலக வாழ்வு தந்து ... தினம் தினம் தன்னை தந்து... இல்லை என்னாது எல்லாம் தந்து... இதற்குமேல் தருவதற்கு ஏதும் இல்லை என்றா எம்மை விட்டுச்சென்றீர்கள்... எட்டுப்பிள்ளைகள் பெற்றெடுத்தீர்... எட்டுத்திக்கும் அனுப்பிவைத்தீர்.. எட்டாத உயரத்தில் இருத்திவைத்தீர்... இப்போது ஒட்டாத உறவாக உம்மருகே யாருமில்லை... கொடிய கொரோனாவில் தப்பியவர் வலிய வயோதிபத்தால் வாழ்விழந்தீர்... பாலூட்டி...உணவூட்டி.. சீராட்டி வளர்த்த எம் அம்மாவை... கோவிட் 19 கொரோணாவால் தொட்டு கொஞ்சி அழுவதற்கோ... தோள் சுமந்து செல்வதற்கோ... பிடிமண் இடுவதற்கோ... பொல்லாத காலத்தில் வந்த காலன் எம்மை விடவில்லை... நெஞ்சம் துடிக்கிறது... மஞ்சம் முள்ளாய்.கல்லாய்.. கனக்கிறது...பசித்தாலும் புசிப்பில்லை... நாம் 6 பிள்ளைகள் இங்கே இங்கிருந்து வழியனுப்ப... ஜயாவும் மற்றும் 2 பிள்ளைகளும் உங்களை வரவேற்க உங்கள் பெற்றோர் ..சகோதர்களோடு அங்கே காத்திருக்கிறார்கள்... எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் என்றும் எங்கள் நினைவும் நீங்கள் தானம்மா.. இறைவன் சந்நிதியில் இன்ப சாந்தி பெறுக.. இறைவனின் இரக்கத்தில் சமாதானத்தில் இளைப்பாறுங்கள்.. மகன் தாசன்..அன்ரனி தேவராஜ்.
Rest IN Peace