யாழ். பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழி, கொய்யாத்தோட்டம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசேப்பின் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 11-07-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஆனாச்சி தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்ற இராயப்பு, மதலேனம் தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற இராயப்பு அந்தோனிப்பிள்ளை(யாழ். புனித வளன் கத்தோலிக்க அச்சக முன்னாள் ஊழியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்ரனி தேவராஜ்(தேவா, தாசன்- ஜேர்மனி Stuttgart), றிஜ்மன்ட் ரவிராஜ்(வவா- லண்டன்), பமிலா ஜஸ்மின் இந்திரன்(றஞ்சினி- ஜேர்மனி Nuremberg), காலஞ்சென்ற ஜறின் பெனிற்ரா(சாந்தி), டண்ஸ்ரன் ரங்கராஜ்(கனடா), ரேமன்ட் கிங்ஸ்லி(லக்கி- சுவிஸ்), காலஞ்சென்ற டேமியன் ஜவன்(அலன்), மேரி அனக்கிளிற் சுகந்தினி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உல்றிகே(ஜேர்மனி), பானுமதி(வேல்ஸ்), ஜெயசீலி(லண்டன்), இந்திரன்(யாழ்ப்பாணம்), ரஞ்சன்(பிரான்ஸ்), சகுந்தலா, தர்சினி(கனடா), பிரியாந்தி(சுவிஸ்), ஜேக்கப்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிலிப்(துபாய்), திர்ஷா(வேல்ஸ்), ஜொயன்னா, றொசானா, தியடோரா(லண்டன்), ஜசோதினி- நியூமன்(ஜேர்மனி, Nürnberg), சுதர்சினி, ராஜன்( கனடா), றொசான், பவித்திரா(ஜேர்மனி Mannheim), எனோக்(கனடா), கிஷாந்த்(சுவிஸ்), அனோஷன்(லண்டன்), ஜோயல் (இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றெசோன், நியான், மரியா(ஜேர்மனி Nürnberg), றியானா, றியா, லியோ(ஜேர்மனி Mannheim), எரோமி, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை திருப்பலியுடன் 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாண கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest IN Peace