யாழ். குருசோர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நான் இருக்கும் இடத்திலே
அவர்களும் என்னோடு இருக்க
விரும்புகின்றேன்",
(யோ. 17: 24)
நீ இந்த மண்ணை விட்டு மறைந்து இன்றோடு ஆண்டுகள் ஐந்து
உன் நினைவால் வாடுகிறது எங்கள் மனம் நொந்து
நாட்கள் மட்டும் நகர்கிறது நீ இல்லாத உலகில் வேதனையைத் தந்து
தீர்க்க மாட்டாயா நம் துயரை மறுபடியும் இப் பூமிக்கு வந்து
நாம் வாடுவது கண்டால் துயர் துடைக்குமே உன் கைகள் விரைந்து
நீ இல்லாத உலகம் கனக்கிறது துன்பங்களால் நிறைந்து
நீ மறைந்து இன்றோடு வருடங்கள் ஐந்து
இருந்தும் நம் மனங்கள் வாடுகின்றன உன் நினைவில் நொந்து
எமக்கான உன் கரிசனை நிறைந்த எண்ணங்கள்
நம் நினைவலையில் வண்ணமாய்
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழியினும்
மாறாது மறையாது என்பது மட்டும் திண்ணம்.