2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்
(சந்திரா)
வயது 56
அமரர் மேரி எட்மென்ரா விமலேஸ்வரன்
1961 -
2017
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். குருசோர் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி எட்மென்ரா விமலேஸ்வரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்"
- லூக்கா 23:43
நீ மறைந்து இரு வருடங்கள் உருண்டும்
நம் மனங்கள் இன்னும் வேதனையால் இருண்டும்
உன் நினைவுகள் நெஞ்சங்களில் அணி அணியாய்த் திரண்டும்
கண்களில் அப்பப்போ கண்ணீர் புரண்டும்
நாட்கள் யுகமாய் நகர்கிறது
எமக்கான உன் கரிசனை நிறைந்த எண்ணங்கள்
நம் நினைவலையில் வண்ணமாய்
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழியினும்
மாறாது மறையாது என்பது மட்டும் திண்ணம்.
தகவல்:
கணவர் விமலேஸ்வரன் (விமல்)