Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 10 SEP 1930
இறைவன் அடியில் 03 MAR 2022
அமரர் மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம்
அதிபர்
வயது 91
அமரர் மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் 1930 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Greenwich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.    

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
 என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
 (லூக்கா 23:43)

பண்பின் உறைவிடமாய் 
பாசத்தின் திருவுருவாய் 
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும் என்றும் 
அணையாத சுடராய் வாழ்ந்து 
கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை நான்கு அகன்றே 
நின்றாலும் அழியாத நினைவலைகள் 
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
 வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
 எம் உயிரினுள் உயிராகி உறவிலே 
கலந்து ஏற்றமுடன் நாம் வாழ 
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
பிரார்த்திக்கும் பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்!

எங்கள் அன்புத் தெய்வத்தின் 
ஆத்மா சாந்தியடைய எல்லாம் 
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Mar, 2022
நன்றி நவிலல் Fri, 01 Apr, 2022