

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Greenwich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி ஆன் ஜெயமணி கனகரத்தினம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"
(லூக்கா 23:43)
எம் இதயமென்னும் கோயிலில்
தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
நம்பமுடியவில்லை முன்றாண்டு கடந்ததை.
மூன்று ஆண்டு போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இல்லா வீடானேன் என்தாயே!
துயரம் துடைத்த தாயவளே
இன்பம் இழைத்த இனியவளே
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எனக்கு உன்னைப்போல் யார் உள்ளார்!
எல்லாமே கடந்து போகும் என்பார்கள்
கடந்தது பன்னிரு மாதங்கள் மட்டுமே தான்
அழுதழுது தேடுதம்மா எம் விழிகள்
உங்களைக் காண்பதற்கு ஒருமுறை வருவீர்களோ!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...
Piease do accept my humble request that i am unable to attend accas soul assumption in Heaven. She will be with us forever and can not remove her everlasting no stop smile from our hearts forever....