13ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மார்க்கண்டு மகேஸ்வரி
வயது 83
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மாங்குளம் ஒலுமடுவிலை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மகேஸ்வரி அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் உம்மைப் பறிந்து பதின்மூன்று
ஆண்டுகள் நீண்டு நெடியதாய்
கழிந்து போனதே அம்மா!
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதம்மா..!!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவர் - அம்மா உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனிடத்தில் தினமும் பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ?????? அம்மா என்றும்...