யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மாங்குளம் ஒலுமடுவிலை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு மகேஸ்வரி அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இல்லா வாழ்வு
நிலவு இல்லா வானம்
அம்மா
உங்கள் நினைவுகளை
சுமந்து
நிழலுக்கு மலர்
தூவி வணங்குகிறோம்
கள்ளமில்லா உங்கள்
உருவை
எங்கு காண்போம்?
கனிவான வார்த்தைகளை
எங்கு கேட்போம்?
உங்கள் உடல் எம்மை
விட்டு போனதம்மா
உங்கள் உயிர் எம்மோடு
வாழ்கிறது
கனவுகளற்ற நினைவுகளோடு
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உம்மை நினைக்க நினைக்க
நெஞ்சம் கனக்கிறது அம்மா!
விழிகள் சொரிகிறது சொல்ல
வார்த்தைகளே இல்லை அம்மா
தாங்க முடியாத சோகத்தை
எமக்களித்து எம்மை விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா!
நீங்கா நினைவுகளுடன் என்றும்
எம் மனதில் வாழ்வீர்கள்!!!
உங்கள் நினைவோடு வாழ்ந்திடும்
உங்கள் பிள்ளைகள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவர் - அம்மா உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனிடத்தில் தினமும் பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🌺🌺🌺🙏🙏🙏 அம்மா என்றும்...