3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
(கமலம்)
வயது 75
அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
1944 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
31
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-10-2023
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்.