யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நாம் பிறந்த போதினிலே அகம் மகிழ்ந்து எம்மைத் தாங்கி
தேனே! திரவியமே! என்றழைத்துச் சீராட்டி
வான் முட்டத் தூக்கி வளர்த்து ஆளாக்கி
மேன் மக்களாக்கி மேதினியில் பெருமையுடன்..
வாழ வழி வகுத்த வள்ளலே! எம் தாயே!
மீளாத் துயில் கொள்ள ஏனோ மனம் வைத்தீர்?
ஆழக் கிணற்றில் வீழ்ந்தலறும் குழந்தையைப் போல்
நீளக் குரல் கொடுத்து நெஞ்சம் உடைகின்றோம்
உடுக்க உடை தந்தீர்! உட்காரத் தோள் தந்தீர்!
கடுக்கும் கால் என்று காலணியாய் நீர் நின்றீர்!
மிடுக்காய் நீர் நிமிர்ந்து பார் போற்ற வாழ்க்கையிலே
வெடுக்கென்று ஏன் மறைந்தீர்? வெம்புகிறோம் அம்மாவே!
வானமழை நிகராமோ? அம்மா! உம் கருணை மழை!
கானக் குயில் நிகராமோ? அம்மா! நீர் அழைக்கும் குரல்!
நாம் இனிக் காண்பதெங்கே? அம்மா! உம் அழகு முகம்
மேனி விழ வாடுகின்றோம்! விரைந்து ஆத்மா சாந்தி பெற!
பாசமுடன் எமை வளர்த்து
நேசமுடன் நன் நெறிகாட்டி
பத்தியொரு, பண்புசால் வழிகாட்டி
இத்தரை மீது எமை உயர்வித்த
அன்புத் தெய்வமாம் கனிந்த நெஞ்சமாம்
எங்கள் இதய தீபமாம் ஒளி விளக்கிற்கு
அளித்திடும் நினைவுப் பூக்கள் - என்றும்
துளிர்த்திடும் இன் நினைவுடன்
என்றும் நாங்கள்...