3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் மணிமொழி ரவீந்திரன்
1966 -
2021
கரணவாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மணிமொழி ரவீந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டு காலம்
இமைப்பொழுதில் போனதம்மா
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
அன்னையே உன்னைப்போன்று
அன்பு செய்ய யாரும்
இல்லை அம்மா இவ்வுலகில்!
அம்மா எங்கள் உயிருடன்
கலந்திட்ட உங்கள் உதிரம்
எம் உடலில் உள்ளவரை
நீங்கள் எம் ஒவ்வொருவரின்
உயிருக்குள் உயிராக வாழ்வீர்கள்
எம்முடன் நாம் இவ்வுலகில் உள்ளவரை!
மறுபிறவி என இருந்தால்
மீண்டும் நாம் உங்கள்
கருவறையில் புதிதாக உருவெடுத்து
உங்கள் மடியில் நாம் தவழ வேண்டும் அம்மா!
வானத்தின் நிலவாய்
வையகத்தின் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும்
உங்களுக்கு எங்களது
நினைவஞ்சலிகள் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்