Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 01 MAR 1958
இறைவன் அடியில் 11 JUN 2021
அமரர் மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் (ஈஸ்வரன்)
வயது 63
அமரர் மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் 1958 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 50 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Stanmore ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மாணிக்கவாசகன் கேதீஸ்வரநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

மூன்றாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 16 Jun, 2021
நன்றி நவிலல் Sat, 10 Jul, 2021