யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தியாகராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள் கோலமுகமும்
உதட்டோரப் புன்னகையும் என்றும் மாறாது!
ஒரு உன்னதமான தெய்வம் நீ அம்மா
நாட்கள் 31 சென்றாலும் உங்களின்
பாசத்திற்கு நாம் பட்ட கடன் தீராதம்மா
ஆனால் முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா
துன்பம் துயரம் தெரியாமல்
எம்மை எல்லாம் ஆழாத்துயரில்
நாட்கள் 31 ஆனதம்மா
ஆயிரம் சொந்தங்கள் அனைத்திட
இருந்தாலும்
நம் உள்ளத்தின் உள்ளே வளரும்
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 04-07-2024 வியாழக்கிழமை அன்று மு.ப 06:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 06.07.2024 சனிக்கிழமை அன்று மு.ப11.00 மணியளவில் அவரது இல்லத்திலும் நடைபெறவிருப்பதால், அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்பத்தினருமாக வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன்பு அழைக்கின்றோம்.
Live streaming- (RIPBOOK சார்பாக 31ம் நாள் நினைவஞ்சலி அந்தியேட்டி நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
Heartfelt condolences to the family and May her soul Rest in Peace