

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மல்லிகாதேவி தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-05-2025
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வம்
எம் அம்மாவே…!
ஆண்டு ஒன்று ஆனது நீங்கள்
எம்மை விட்டுப் பிரிந்து
அழுது
அழுது புலம்புகின்றோம்
உங்கள் பிரிவு தாங்காமல்…!
ஒர் ஆண்டு அல்ல பல
பத்தாண்டுகள் ஆனாலும்
மறவோம் உங்களை
ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்…!
அம்மாவே உன்னைப் போன்று
அன்பு செய்ய யாரும் இல்லை இவ் உலகில்..!
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய்ப் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே..!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம்
உங்கள்
நினைவுத் துளிகள்
விழிகளின்
ஓரம்
கண்ணீராய் கரைகின்றதம்மா…!
பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள்
நினைவுகள் பசுமையாக எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்…!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் நீங்கா நினைவுகளுடன்….
தங்களைப் பூசிக்கும்,
கணவர், மகன்மார்,
மருமகள்மார் , பேரப்பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள், மைத்துனர் மைத்தினிகள்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Forever in my heart By Loving Daughter in law Sharmila
Heartfelt condolences to the family and May her soul Rest in Peace