Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 27 DEC 1943
விண்ணுலகில் 06 JUN 2024
திருமதி மல்லிகாதேவி தியாகராஜா (தேவி ரீச்சர்)
ஓய்வு பெற்ற ஆசிரியர் யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி
வயது 80
திருமதி மல்லிகாதேவி தியாகராஜா 1943 - 2024 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தியாகராஜா அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காளிராசா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நல்லதம்பி தியாகராஜா(ஓய்வுநிலை அதிபர் யா/ மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தியாகசிறீலன்(Aircraft Engineering - Emirates Airlines), Dr. குமணன்(ICU & Anesthesia - போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,

மார்க்கண்டு, மகேந்திரன்(அவுஸ்திரேலியா), சவுந்தரம், காலஞ்சென்ற பாலசிங்கம்(கிளி), தவமணிதேவி(ஜேர்மனி), நவரத்தினம்(அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி(கனடா), சிவனேசராசா(கனடா), மங்கயற்கரசி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சாந்தகுமாரி, செல்வமலர்(அவுஸ்திரேலியா), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சர்மிளா(Owner of Joyland center Nursery - UK), Dr நிருபா (OPD & ETU - ஆதாரவைத்தியசாலை சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திவ்வியன், சிறீமாறன், சிறீமன், ஆரபி ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

ஞானபூங்கோதை(நோர்வே), சற்குணலிங்கம்(இத்தாலி), புஸ்பலீலா(பிரித்தானியா), சிறீகாந்தன்(நோர்வே) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணி முதல் 11.00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தியாகசிறீலன் - மகன்
தியாகசிறீலன் - மகன்
குமணன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Forever in my heart By Loving Daughter in law Sharmila

RIPBOOK Florist
Sri Lanka 1 week ago

Photos

Notices