திதி: 14-06-2026
யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மல்லிகாதேவி தியாகராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்
உங்கள் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உங்கள் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
கணப்பொழுதில் கண்மூட
உங்கள் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீங்கள் இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உங்கள் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்…!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் நீங்கா நினைவுகளுடன்!
தங்களைப் பூசிக்கும், கணவர், மகன்மார்,
மருமகள்மார் , பேரப்பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள், மைத்துனர் மைத்தினிகள்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Forever in my heart By Loving Daughter in law Sharmila
Heartfelt condolences to the family and May her soul Rest in Peace