யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூவிரண்டு ஆண்டுகள்
ஆனதம்மா உமைப்பிரிந்து
ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்தீர்கள்!
வாசம் குன்றா வாழ்வு தந்து வளர்ச்சிக்கு
வழி காட்டினீர்கள்! பண்போடும்
அன்போடும் பழகி உறவினர்
பாசமதை பெற்றீர்கள்!
நம்பவே முடியவில்லையே
நேற்றுப் போல் இருக்குதம்மா
உங்களிடம் நாம் கழித்த பொழுதுகள்
இன்று எம் அன்னை எமை விட்டு
விண்ணுலகம் சென்றாலும் உம்மை
என்றும் எண்ணியே எம்முலகம்
சுற்றும்! இவ்வுலகம் உள்ளவரை....
ஆறு ஆண்டைக் கடந்தாலும்
ஆண்டுகள் பற்பல பறந்தாலும்
உங்கள் நினைவுகள் மறையாது
எங்கள் மனத்திரையில்
உங்கள் நினைவுகள் வந்து
வந்து மீட்டிச் செல்கிறது
அன்று போல் இன்றும்
எம்மோடு இருப்பது போல்
மனதை வருடி செல்கிறது
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை
ஒவ்வொரு பொழுதும் ஏங்க
வைக்கின்றது அம்மா
கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள் என்றும்
என் மனதை விட்டு கலையாது.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எல்லாம்
வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..!