4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா
வயது 80
அமரர் மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா
1939 -
2019
மட்டுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி விக்னேஸ்வரராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் மட்டும் அல்ல
எத்தனை ஆண்டுகள் போனாலும்
மீண்டும் மீண்டும் அம்மா அம்மா என்றே
மனம் தேடுகின்றதம்மா!
வார்த்தைகள் இல்லாமல் பேசினோம்
கண்கள் இல்லாமல் ரசித்தோம்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தோம்
உங்கள் கருவறையில் மட்டும் அல்ல
உங்கள் அரவணைப்பிலும் தானம்மா!
அதிகமான இன்பத்தை தந்த நீங்கள்
அதிகமான துன்பத்தையும் தந்து போனீர்களே...
அம்மா என்றும் எங்கள் மனதில்
மறையாது மறக்கவும் முடியாது!
கனவுகளை நாங்கள் சுமந்து
கண்களில் நீர் சொரிந்து
கலங்குகிறோம் உங்கள் நினைவால்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்