யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Vevey ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணன் கந்தசாமி அவர்களின் நன்றி நவிலலும்.
அன்புத் தெய்வமே!
நல்வராய் எம்மைப் பெற்றெடுத்து
அனைத்துச் செல்வங்களையும்
எமக்காய்த் தேடித் தந்து
இறுதிவரை மகிழ்வித்தீர்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் அப்பாவின் நினைவுகள்
எம்மோடு கூடவே குடியிருக்கும்
அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு விட்டு சென்றுவிட்டீர்களே!
என்றென்றும் எங்களின் இதயத்தில்
இருப்பீர்கள் அப்பா..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் தெய்வத்தின் 31ம் நாள் நினைவஞ்சலி 21-10-2023 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை நடைபெறும் அதனைத்தொடர்ந்து ஆத்மசாந்தி மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Cure catholique romaine de Clarens
Av. Alexandre Vinet 34,
1815 Montreux,
Switzerland