யாழ். காரைநகர் அல்லின் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Vevey ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலட்சுமணன் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 09-09-2024
மனைவியின் மனக்குமுறல் ஆண்டு....!
ஒன்று சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லை அப்பா
இதயத்தில் இரக்கம் கொண்டவரே
எம்மை விட்டு சென்றதேனோ
புன்னகை பூத்த பொன்முகமும் மறைந்தது ஏனோ
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமோ உங்கள் அன்பு மட்டும் அப்பா
பூங்காவாய் நீரே இருந்தீர்
பறவையாய் பறந்து விட்டீர் அப்பா
பூக்கள் எல்லாம் வாடி விட்டோம்
பூமுகத்தை தேடுகிறோம்
எப்போ எங்களிடம் வருவீர் அப்பா
பிள்ளைகள் மனக்குமுறல்....!
ஆண்டு ஓன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உம் அன்பு முகம் எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள் அப்பா!
அப்பா என்ற வலிமையை நீங்கள் இல்லாத
காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை
பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள் அப்பா!
உங்கள் குரல் எங்கள் காதுகளில்
இப்போதும் கணீரென்று கேட்குதப்பா!
ஆண்டு ஒன்று கடந்தாலும் உங்கள் புன்முறுவல்
எங்கள் நெஞ்சில் இந்துகொண்டே இருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.