என் ஆயுளின் மூலமான நண்பனே--!
ஒவ்வொரு நாட்களையும் அழகாக்கிய கண்ணனே--!
பிறந்த காலம் தொட்டு கைப்பிடித்து நடந்த
நட்பு எனும் பெரும் காதலே---!
நீ இறந்த செய்தி கேட்டு இடிவிழுந்ததே
இதயத்தில்
இனி யார் பூப்பார் உன் போல் வருங்கால உதயத்தில்----!
அழைப்பிதழ் இல்லாமல் ஓடி வரும் முதல் வரம்
நீயல்லவா---!
அணைத்துமாகி நின்று விளக்கேற்றும்
தாயல்லவா---!
துக்கம் நிரம்பி தொண்டையில் முள்ளாய் குத்த
பக்கம் வந்து அழ முடியாத பாவியானேன்
நானல்லவா---!
என்னைப் பெற்றவள் இறந்த போது பக்கம் நின்றாய்
என் மூத்தவள் மணந்த போது முன்னே வந்தாய்
கற்றவர் உற்றவர் நட்புகள் முன் என்னை
சபையேற்றி மகிழ்ந்தாய்
கண்ணீரால் தனித் தீவாக்கி எங்கடா போய்
மறைந்தாய்---!
என் நம்பிக்கை நீ போன போதே காணாமல் போய் விட்டது- என் பெரும் நம்பிக்கையும்---'
என் அன்பின் பெருங்கருணை நீயில்லாததால்
வெறும் கூடானது--- என் உயிர் தோப்பும்---!
தும்பிக்கையானை வணங்கி விளக்கேற்றி வைக்கிறேன்- நண்பா---!
துடித்தழும் இதயத்திற்கு எப்படி
ஆறுதல் கூறுவேன் நண்பா🔥
🔥ஓம் சாந்தி 🔥