அன்பான அண்ணன் அனுவலோகனே! அவசரமாய் ஆண்டவன் உனை அழைத்ததேனோ உன் புன்னகை முகம் காண்பதெங்கே? உன் மெய் போனது பொய்யாகாதோ? வற்றுகிறது நம் வயிறு வெற்றிடமாக உன் துயர் கேட்டு, உடன் உருக்குலைந்தான் என் அண்ணன், உன் அருமை நண்பன் தன் அண்ணனை அழைத்தது ஆனந்தலோகனோ? பள்ளிமுதல் பாரிஸ் வரை பண்புடன் பழகியவனே எம் இன்பமது, துன்பமது முன்னாளாய் முதல் வந்தாய் எங்கு செல்வோம் இனி உனைக்காண குடும்பம் சிறக்க நாடு பல சென்று நிறைவாக உழைத்தாயே உன் உதவி கிடைத்தோர் உனை மறவார் ஒருபோதும் மனதார உனை வாழ்த்த பலருண்டு இம் மண்ணில் மட்டுவில் நாடுதனில் மிகிழ்வாய் வாழ்ந்தோமே மண்ணைவிட்டுப் போன மர்மம் தான் என்னவோ உற்ற மனைவியுடன், பெற்ற பிள்ளைகள், பேரப்பிள்ளைகளென மட்டற்ற மகிழ்ச்சியுடன் மகிழ்ந்து வாழ்ந்தாயே கண்ணை மூடிவந்தானோ காலன் உனைக் காவியெழ உறைந்து விட்டதையா உன் சொந்தம் உனைப் பிரிந்து உறுதி பெற வேண்டுமையா உன் உறவு எந்நாளும். அன்னாரின் ஆத்மா சாந்திபெற ஆண்டவனை வேண்டுகிறோம்.🌹🙏. ஓம் சாந்தி... ஓம் சாந்தி... ஓம் சாந்தி... குகன், குமுதினி London