
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Navaratnam Anuvalogan
1959 -
2021

மலர் அத்தை நீ எனது மருமகன் என்பதை விட எனது முதல் பிள்ளையடா! நீ எத்தனையோ ஆசைகளை நிறைவேற்றி வைத்தாய். எனக்கு ஒரு அண்ணன்,அவர் சிறுவயதில் என்னை விட்டுபிரிந்துவிட்டார். ஆனால் அந்த அண்ணாவை உன்னில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். ஏன் நீ என்னை முந்திக்கொண்டு சென்றுவிட்டாயோ தெரியவில்லை. ஏன் உனக்கு இவ்வளவு அவசரமான பயணம் மருமகனே?? உன்னுடைய இந்த பயணம் என்னை உருக வைக்குதடா மருமகனே! எனது மனம் துடிக்குதையா இது பொய்யான செய்தியாய் இருக்காதா? என்று. உனது அன்பான, தயவான குணத்துக்கு இறைவனின் பாதத்தில் நிச்சயம் ஆசீர்வாதம் உனக்கு கிடைக்கும். உனது ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி .மலர் அத்தை பூனகரி.
Write Tribute