14ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பிரான்ஸ் Chelles ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லிங்கநாதன் அஜிதா அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பதினான்கு கடந்த பின்னும்
ஓயவில்லை நினைவலைகள்
அல்லி மலர் முகமும் முல்லைச் சிரிப்பும்
அகலவில்லை எம் நினைவில்
தேவதையே உனை எண்ணி தேடி அலைகின்றோம்
உன் திரு முகத்தை காண்பதற்கு
தூக்கம் கெடும்போதும் கொல்கிறது உன் நினைவு
தூங்கி எழும்போதும் கனக்கிறது எம் இதயம்
கட்டிய கோட்டையெல்லாம் கற்பனையாகியதே!
ஈன்றவள் பரிதவித்தாள் சுமந்தவன் பாவியானான்
காலனவன் கொடியவனே அறிந்திலனோ எங்கள் நிலை
இன்று வரை நாம் பதினான்கு வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை செல்லக் கிளியே!
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்
உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்