Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 2000
இறப்பு 01 JUL 2012
அமரர் லிங்கநாதன் அஜிதா
வயது 11
அமரர் லிங்கநாதன் அஜிதா 2000 - 2012 Chelles, France France
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

பிரான்ஸ் Chelles ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லிங்கநாதன் அஜிதா அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.  


மகளே!!!!!!!
உனையிழந்து பன்னிரண்டு ஆண்டுகள்
 ஆகிவிட்டது

 உனை நினைக்காத நொடியில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம்

உன்னை நாங்கள் ஒரு முறை தான்
 பிணமாக பார்த்தோம் ஆனால்
நாமிங்கு நித்தம் நடைப்பிணமாக வாழ்கிறோம்
மகளே மீண்டும் நீயிங்கு வரமாட்டாயா???
நாமிழந்த அத்தனையையும் மீட்டுத்தரமாட்டாயா???

இன்று வரை நாம் பன்னிரண்டு வருடங்கள்  நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை செல்லக் கிளியே!

கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்
அன்பு மகளே!!!!

உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices