4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் லஜினி விக்கினேஸ்வரன்
வயது 40

அமரர் லஜினி விக்கினேஸ்வரன்
1980 -
2021
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
32
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லஜினி விக்கினேஸ்வரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!
நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்
ஆருயிர்த் துணைவியாய்
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்
மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
கணவர், பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் இழப்பினை இன்னும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை லஜினி.உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.ஓம் சாந்தி.