மரண அறிவித்தல்
மலர்வு 04 AUG 1980
உதிர்வு 24 JUL 2021
திருமதி லஜினி விக்கினேஸ்வரன்
வயது 40
திருமதி லஜினி விக்கினேஸ்வரன் 1980 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario, பிரான்ஸ் Savings-Le Temple ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லஜினி விக்கினேஸ்வரன் அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அமராவதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

திருநாவுக்கரசு, காலஞ்சென்ற மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், பாலசந்திரன் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விக்கினேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

லவிசன், அக்‌ஷரா, அவனிஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கருணாகரன்(கனடா), சந்திரவதனி(கனடா), காலஞ்சென்ற தயாவதனி, லதாயினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரநாயகி, விக்கினேஸ்வரலிங்கம், சாந்தி, பரமேஸ்வரன், சரோச்குமரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விஜயகுமாரன், கோபிகா ஆகியோரின் அன்புச் சகலியும்,

தூரினா, தமினா, திசானா, கயானி, காருனி, கர்ணிகா ஆகியோரின் அன்பு அத்தையும்,

வர்ஷன், வர்சீகன், வர்யின் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற வரதராஜசிங்கம்(அதிபர்)- ஞானம்மா, தனபாலசுந்தரம்(ஆசிரியர்)- ஞானவள்ளி, காலஞ்சென்ற கைலாயநாதன், திருஞானம்(கிராமசபை உத்தியோகத்தர்)- சந்திரகுமாரி ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை மங்கையகரசி, காலஞ்சென்ற கனகாம்பிகை சண்முகநாதன் ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-07-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:30 முதல் ந.ப 12:30 மணிவரை Cimetière Intercommunal des Joncherolles எனும் முகவரியில் மலரஞ்சலிக்காக வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரன் - கணவர்
கரன் - சகோதரன்
சந்திரவதனி - சகோதரி
லதாயினி - சகோதரி
சந்திரநாயகி - மைத்துனி
தையல்நாயகி - மாமி
திருஞானம் - மாமா
முரளிகரன் - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 23 Aug, 2021