Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 DEC 1937
மறைவு 15 MAR 2021
அமரர் குட்டிப்பிள்ளை பரமலிங்கம் 1937 - 2021 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், திருவையாற்றை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த குட்டிப்பிள்ளை பரமலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் அன்பு அப்பாவே!
 இதயத் துடிப்பின் அருமருந்தே!!!

காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும் துடிக்கின்றோம்!
 ஆண்டு மூன்று ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது- அப்பா

புன்னகை புரியும்
உங்கள் முகம் தெரிகிறது தினம் தினம்!
 வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
 வானடைந்து மூன்று ஆண்டு ஆனாலும்
 அப்பா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!

அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
 எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!

நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
 என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா!

மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
 உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!

என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் உங்கள் அன்பு 
மனைவி மற்றும் பிள்ளைகள்...!

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்