

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், திருவையாற்றை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட குட்டிப்பிள்ளை பரமலிங்கம் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் கடைசி அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலாதேவி(சாந்தி- சுவிஸ்), தர்மரத்தினம்(சாந்தன்- கனடா), யசோதா(இலங்கை), விஜிதா(விஜி- லண்டன்), அரவிந்தன்(இந்து- இலங்கை), ரமேஸ்வரன்(ரமேஸ்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுமித்திரன், நீத்தா, பொன்னவராஜன்(ராஜன்), தவக்குமார்(தவம்), யாழினி, பிரியதக்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நாகம்மா, கந்தையா, ராமநாதர், நாகலிங்கம், தர்மலிங்கம், மயில்வாகனம் மற்றும் பொன்னம்மா, பராசக்தி, ராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கைலாயபிள்ளை, தெய்வானைபிள்ளை, காலஞ்சென்ற நாகேந்திரம், பரமபூபதி(சின்னம்மா), அந்தோனிபிள்லை(வாடி அக்கா), பொன்னம்மா, கண்மணி(அன்னக்கிளி), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ரகுநாதன், மார்க்கண்டு, தர்மலிங்கம், வைத்திலிங்கம் மற்றும் பராசக்தி, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபித்தா, சஞ்சிவ், சாரு, பிரகலாதன்(லாதன்- சுவிஸ்), பிரதீபா(தீபா), கபிலன்(கபில்), பிரவின், நிஸ்வின், அரவிந், கீர்த்தனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-03-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் உருத்திரபுரம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.