யாழ். மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துரை(துறை), திருப்பூர் ஒன்றியம், விநாயகர் வீதியைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், இணுவில், பருத்தித்துறை எரிந்த அம்மன் கோவிலடி, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குணபாலசிங்கம் செல்வச்சிவகுமரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
உங்களை நாம் இழந்த துயரை ஈடு செய்ய இயலாமல்
தவிக்கின்றோம் அப்பா!
ஆயிரம் ஆண்டாலும் அழியா உங்கள் நினைவுகளும்
உங்கள் அன்பும், பாசமும் எம்மை விட்டு பிரியாது!
கண்மூடி திறக்கும் நேரத்தில் எங்களை தவிக்கவிட்டு
நிரந்தரமாக பிரிந்தீர்களே! உங்களுக்கு நிகர்யார்!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே!
நீங்கள் எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் எங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் உங்களோடு
நிழல் தந்து எமை வளர்த்து நிலைத்து மண்ணில் வாழவைத்து
உறுதியுடன் எம்மை காத்த எங்கள் அன்புத் தெய்வமே!
உங்கள் அன்பாலும், அரவணைப்பாலும் எப்போதும் சிரித்த முகத்துடனும்
அடுத்தவர்களிற்கு கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தீரே!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உம் உறவுக்கு
யாருமே நிகரில்லை!
பிரிவினில் உம் மறைவினில் நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
உங்கள் வர்த்தைகள் எம்மை வாழவைக்கும்
உங்கள் நினைவுகள் எம்மை வாழ்த்திடும்
நாம் வாழும் காலம்வரை உங்கள் நினைவுகளுடன் வாழ்ந்திடுவோம்
இனி எப்போது எங்கள் முகம் பார்ப்போம் உங்கள்
புண்முகம் பார்க்க ஏங்கி தவிக்கின்றோம் அப்பா!
என்றும் உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்
அப்பா என்ற சொல்லுக்கு யாரும் நிகரில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!