அமரர் திரு. குமாரசாமி பரராசசிங்கம் கண்ணீர் அஞ்சலி கடல்சூழ் ஈழத்தின் வடபால் அமைந்த நல் -நெடுந்தீவில் புகழ்சூழ் நற்கலைக்கூடமும் அறிஞர்களுறை- நல்மத்திய பகுதியில் தென்னஞ் சோலையும் பனந்தோப்பும் கிளிகள்-பாடும் காரைவளவுதனில் பொன்னிற மேனியராய் உதய சூரியனாய் இனிய-மைத்துனர் பரராசசிங்கம் உதித்தார் அந்தோ! குடும்பத்தின் குலவிளக்காய் தக்க தலைமகனாய்-தோன்றிய செம்மல்! கரும்பினிய நற்பாசமும் நெறிப்படுத்தலும் சகோதரர்களுக்குக் காட்டியவர் கல்வியே! கருந்தனம்! எனக் கற்றுச் சிறப்புக் கண்டவர்! கண்ணியமாய் வாழ்க்கையில் நேரிய நெறியை-என்றும் கொண்டவர்! நேரிய பார்வை! நிமிர்ந்த நடை! சீரிய சிந்தனையாளர்! பாரில் யாரும் கண்டிராத மாமனிதர்! ஊழல் நிறைந்த சமுதாய மத்தியில் உத்தமரிவர்! உண்மையாய் ஊருக்குழைத்த நல்அரசபணியாளரிவர்! இல்லறமாம் நல்லறத்தில் நன்மனையாள் தனைப் பெற்றவர்! இனிய பாசமக்கள் ஐவரைப் பெற்றுக் கல்வியில் உயர்வு கண்டவர்! எல்லையில் நற்குணமருமக்களையும் நற்பேரர்களையும் கண்டவர்! சடுதியில் தன்னினிய துணையை இழந்ததால் பெருந்துயரில் மூழ்கியவர்! உறவினரை நேசிப்பதில் நிகரில்லா பேரன்புடையவர்! நாடுவிட்டு நாடுவந்த போதும் கூடும் உறவை என்றும் -விரும்புபவர்! அனுதினமும் தொலைபேசியில் மச்சான் எனும் -உறவை வலுவாக்கிய அன்பரிவர்! என்றும் நெழுவினி விநாயகரை இனிதே இதயத்தில் ஏற்றியவர்! காலம் நெருங்கியதால் கொடியகாலன் கவர்ந்து -விட்டான்! பேரன்புப் பிள்ளைகளும் மருகர்களும் பேரர்களும் -வெதும்பி அழுகின்றார்! உடன்பிறப்பினர் உள்ளம் துடித்து உருகி -அழுகின்றார்! சுற்றமும் நாமும் அன்பு மைத்துனர் உம் திடீர் -மறைவால் துயருறுகின்றோம்! உற்றதுணையைத் தொடர்ந்து விண்ணுலகம் -சென்றனையோ! அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினைப் பகிர்ந்து கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! பிரிவுத்துயர் பகிரும் அன்பான மைத்துனர் குடும்பம் திரு. திருமதி. புண்ணியசிங்கம் சுப்பிரமணியம் (ஆனந்தம்)
நல்லதையே நினைத்து, நல்லதையே புரிந்து, எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்னும் நல்மனத்துடன் என்றும் வாழ்ந்த எங்கள் ஆருயிர்த் தந்தை! எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகி, நிறைவான தன் வாழ்வை...