Clicky

பிறப்பு 05 NOV 1929
இறப்பு 31 DEC 2020
அமரர் குமாரசாமி பரராசசிங்கம் (செல்வம்)
வட-கிழக்கு மாகாணங்களுக்கான ஓய்வுபெற்ற வேலைப் பரிசோதகர்(inspector of works)
வயது 91
அமரர் குமாரசாமி பரராசசிங்கம் 1929 - 2020 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thaya, Dilip, Ahilan and Jamuna 26 JAN 2021 Canada

நல்லதையே நினைத்து, நல்லதையே புரிந்து, எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்னும் நல்மனத்துடன் என்றும் வாழ்ந்த எங்கள் ஆருயிர்த் தந்தை! எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகி, நிறைவான தன் வாழ்வை எல்லோருக்கும் வாழ்ந்து காட்டி, எங்கள் வாழ்வின் வழிகாட்டியாய்த் திகழ்ந்து அமரத்துவமடைந்தார். இத்துயரச் செய்தியைக் கேட்டு நேரில் வந்தும், தொலைத்தொடர்புகள் மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும், மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும், குறிப்பாக, இறுதி நிகழ்வுகள் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக வருகை தந்து எமக்கு உதவிகள் நல்கிய ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர்: திரு. லோகன் கணபதி அவர்களுக்கும், தற்போதைய நெருக்கெடியானதும் கடினமானதுமான சூழ்நிலையில், பார்வை நேரக் கட்டுப்பாட்டுக்கிணங்கி கடும்குளிரில், காத்திருந்து கண்ணீர் அஞ்சலிகள், மலர் அஞ்சலிகள் செலுத்தி ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும், இறுதி நிகழ்வில் கனடா மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொலைத்தொடர்புகள் மூலமும் லங்கா-சிறி நேரடிக் காணொளி மூலமும் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்து, இறுதி மரியாதை செலுத்தியவர்களுக்கும், லங்கா-சிறியில் துயரினைப் பகிர்ந்து கொண்டு ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும், இத்துயரச் செய்தியை அனைத்துலக ரீதியாகக் கொண்டு சேர்த்த லங்கா-சிறி, யாழ் - உதயன் பத்திரிகை, கனடா - தாய் வீடு பத்திரிகை, கனேடியத் தமிழ் வானொலி (சி.ரி.ஆர்.), கனேடியப் பல்கலாசார வானொலி (சி.எம்.ஆர்.), முத்தமிழ் வானொலி, அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - தமிழ்(ஐ.பி.சி. - தமிழ்) கிழக்குப் பண்பலை வானொலி (ஈஸ்ட்.எப்.எம்.), நெடுந்தீவு - கனடா ஒன்றியம், நெடுந்தீவு - ஐக்கிய இராச்சிய ஒன்றியம், குளோபல் உடுவிலார் ஒன்றியம், , கனடா - உடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம், கனடா - யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியம் மற்றும் முகநூல், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பலவகையில் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகளை எங்கள் ஆருயிர்த் தந்தையின் ஆசிகளுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். “மிக்க நன்றிகள்...!!!” இங்ஙனம், குடும்பத்தினர்

Tributes