மாமா..... உங்கள் பாசமான அந்த இனிமையான குரலை எனி எப்போது நான் கேட்பேன். ஏங்குகிறது என் இதயம்.எப்பொழுது கதைக்கும் பொழுதும் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்,நல்லா படிக்கிறார்களா,என்அப்பா எப்படி இருக்கிறார்,தங்கச்சிமார் என்ன செய்யினும்,எப்படி இருக்கினும் என்றெல்லாம் விசாரிப்பீர்களே மாமா.எனி அந்த அன்பான விசாரிப்புகளையும் உங்கள் கரிசனையான பாசத்தையும் எனி எப்போ கேட்பேன்.உங்களுடன் அருகில் இருந்து பழகிய அந்த பொன்னான நாட்கள்; உங்கள் இளமைக்காலங்கள்,குடும்பஉறவுகள் பற்றிஎல்லாம் கதை கதையாய் சொன்னீர்களே மாமா என்றுமே என்நெஞ்சில் நீங்காநினைவுகள் அவை.இன்னும் எத்தனையோ ஆசைகளுடன். உங்களிடம் வருவோம் மீண்டும் சந்திப்போம் என்று நினைவுகளிலிருந்தேன்.எல்லாம் கனவுகளாகிவிட்டதே மாமா.சடுதியில் காலன் உங்களை பறித்துவிட்டான்.ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.உங்களின் தூய்மையான புனித ஆன்மா இறைவனின் திருவடியில் நித்தியமாய் இளைப்பாறட்டும்.ஓம் சாந்தி!!! அன்புடன் மருமகள் சுகனயா.
நல்லதையே நினைத்து, நல்லதையே புரிந்து, எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்னும் நல்மனத்துடன் என்றும் வாழ்ந்த எங்கள் ஆருயிர்த் தந்தை! எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகி, நிறைவான தன் வாழ்வை...