எங்கு சொல்லாமல் போநீர்கள் அப்பா? எல்லோரையும் அரவணைத்து அன்பாக பேசுவீர்களே, இப்போ எங்கு போநீர்கள் அப்பா? குடும்பத்தினருக்கு நிகராக சகோதரர்கள் மேலும் உறவினர்கள் மேலும் பாசம் கொண்டீர்கள், இப்போ எக்கு போநீர்கள் அப்பா? அடிக்கடி தொலைபேசியில் சுகமாய் இருக்கிறேனா என்று கேட்பீர்களே, யார் இனி கேட்பார் அப்பா? வேலை என்று அலைந்து திரியாமல் கவனமாக சாப்பிடு என்று யார் இனி சொல்லுவார் அப்பா? சிறுவயதில் தோளில் தூக்கி வைத்து நல்லூர் கந்தனையும் மருதடி பிள்ளையாரையும் காட்டிநீர்கள், இறைவனை காண போநீர்களோ அப்பா? ஏழு ஆண்டுகள் அம்மாவை பிரிந்ந கவலையில் அல்லல் பட்டீர்கள், போதும் இனி இந்த வாழ்கை என்று அம்மாவை தேடி போய் விட்டீர்களோ அப்பா? ஒரு வார்தை சொல்லாமல் போய்விட்டீர்களே அப்பா? இனி எப்போ உங்கள் சின்ன சிரிப்புடன் சேர்ந்த கனிவான குரலை கேட்பேன் அப்பா? அம்மாவுடன் சேர்ந்து ஒழியாக இருந்து வழிகாட்டுவீர்களா அப்பா? ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நல்லதையே நினைத்து, நல்லதையே புரிந்து, எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்னும் நல்மனத்துடன் என்றும் வாழ்ந்த எங்கள் ஆருயிர்த் தந்தை! எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்காகி, நிறைவான தன் வாழ்வை...