Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 AUG 1972
இறப்பு 10 SEP 2023
அமரர் குலசேகர் அஸ்டலட்சுமி 1972 - 2023 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகர் அஸ்டலட்சுமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  
திதி: 07-09-2026

ஆண்டுகள் மூன்று
ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அம்மா!!

எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அம்மா!!

இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!

மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்!
மூன்றாண்டு மட்டுமல்ல உயிருள்ள
வரை நாமென்றும் அஞ்சலிப்போம்.

உங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: அக்கா குடும்பத்தினர்(ஸ்ரீ லங்கா), தம்பி குடும்பத்தினர்(ராஜன் - லண்டன்),லக்சன்(மகன் - பிரான்ஸ்)

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 10 Sep, 2023
நன்றி நவிலல் Sat, 07 Oct, 2023