

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட குலசேகர் அஸ்டலட்சுமி அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும்,
மேனலக்சன்(லக்சன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
ஷானு அவர்களின் அன்பு மாமியாரும்,
லயா அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன் மற்றும் சீதாலட்சுமி(ராசாத்தி), விமலாலட்சுமி(தயா), ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி, ஸ்ரீதரன், புவனேஸ்வரன், லதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பார்த்தீபன், சுதர்சன், சுஜீவன், சிந்துஜா, கௌசிகா, யுவராஜ், பிரியா ஆகியோரின் அன்புச் சித்தியும்,
பிரசாத், கோபிகா, மிதுசன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2023 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம் மாமா குடும்பம் Holland