

யாழ். நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி 411 சில்வாவீதி, வவுனியா இறம்பைக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணபிள்ளை இலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் கொடுத்த அம்மா!
உங்கள் குரல் கேட்காமல் ஆண்டொன்று ஆனதம்மா இன்று!
அழுதழுது தேடுகின்றோம் உங்களை !
அழுத விழிக்கு ஆறுதல் காட்ட
ஒருமுறையாவது வாங்கம்மா எம்முன்னே!
ஆயிரம் உறவுகள் அருகில்
ஆற்றுப்படுத்த அறியாத நெஞ்சங்களாய்!
வலிகள் தொடர்ந்த வேளைகளில் எங்கள்
வழிகளுக்கு வலிமை தந்த அம்மா!
இன்று விழிகள் நிறைந்த கண்ணீருடன்
வழிகளெல்லாம் நாங்கள் அம்மா!
இறைவனும் இரக்கமற்றவனாய்
இருளாக்கிவிட்டான் எம் மனதை!
ஒருமுறையாவது வாங்கம்மா எம்முன்னே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!