2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி
வயது 74

அமரர் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி
1945 -
2020
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
19
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, ஜேர்மனி Hannover ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நித்தமும் வாழ்கின்றீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே...
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாடும்
உங்கள் நினைவுகள் ஒருபோதும்
எம்மைவிட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நிழலின் நிஜத்தைத்தேடி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Life takes from us only lives we were given by it. Rest in peace