இறுதி வணக்கம்! : கிருஷ்ணா பரிமளராஜா (மாஸ்ரர்) நண்பர் பரிமளராஜா (மாஸ்ரர்) 13.03.2022 அன்று இரவு காலமாகிய தகவல் அதிர்வாக வந்தடைந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர் வேலையிலிருந்து திரும்பியவர் வீட்டில் மயக்கமுற்றதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருக்கிறார் என அறிந்து திகைப்புற்றிருந்தோம். சிந்திக்கும் உயிரிகளான மனிதர்களாக நடமாடும் எமக்கு மரணத்தின் காலக்கெடு தெரிய வரும்போது அது மிகக் கொடூர தருணமாகி அழுத்திச் செல்கிறது. இவர், ஐரோப்பியப் புலம்பெயர்வு வாழ்வில் சந்தித்து குடும்பமாக நெருக்கமாகிய இனிய நண்பர்களில் ஒருவர். சமூகக் கரிசனையாளர், புதிதாய் அறிமுகமான சமூகக் அக்கறையாளர்களை எஸ்லோகே (Eslohe) சிறுநகரில் இன்முகத்தோடு வரவேற்று விருந்தோம்பி மகிழும் பண்பாளர், காக்கையின் புலம்பெயர் வாசகர், செர்மனியின் வடமேற்கே நீர்தூவும் ((Sauerland)) பிராந்தியத்தில் ஒழுங்கமைப்பாகும் தமிழ்க் கலை பண்பாட்டு பொது நிகழ்வுகளில் முன்நின்று செயற்படும் செயற்பாட்டாளர், அதிர்ந்து பேசாது இரசனைபொங்க வசீகரிக்கும் சிரிப்போடு எளிமையாக நட்புறவாடும் பண்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக என்றென்றும் உதட்டில் தவழும் புன்முறுவலுடன் உறவாடும் நல்ல மனிதனாக அவர் சார்ந்த நினைவலைகள் மனக் கேணியில் மெதுவாக அசைகின்றன. இலங்கையில் அவர் ஆசிரியராகப் பணியாற்றிருந்தார். ஆனால் நான்கு தசாப்த கால ஜெர்மனியப் புலம்பெயர்வு வாழ்வில் தான்சார்ந்திருந்த மக்களால் வாஞ்சையுடன் 'மாஸ்ரர்' என அழைக்கட்டவராய் வாழ்ந்திருக்கிறார். பலருக்கு இவரது பெயர் கூடத் தெரியாது. இவரும் இவரது இணையரும் திக்குத் திசைதெரியாது எஸ்லோகே சிறு நகருக்கு அருகாமையில் குடியேறிய பலருக்கும் புலம்பெயர்வு வாழ்வின் தகுநல் திசைகாட்டிகளாகத் திகழ்ந்தார்கள். 'நேற்றிருந்தான் இன்றில்லை' எனும் பிறப்பு-இறப்பு நிலையாமை நியதியை ஏற்றவராய் ஆழ்ந்த இரங்கல்! உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (குறள் 339 - நிலையாமை) திடீர் சுகவீனத்தால் இயற்கையெய்திய பரிமளராஜா மாஸ்ரர் அவர்களது பிரிவால் துயருறும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், சுற்றத்தினர் அனைவரோடும் நாமும் சங்கமிக்கிறோம்! அவரது நீங்கா நினைவுகளுடன் எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறோம். 'வாழ்நாள் மாஸ்ரர்' என வாழ்ந்த மனிதனுக்கு மௌன வணக்கம்! - முகுந்தன் - அருந்தா குடும்பம் (பிரான்சு) 21.03.2022 நண்பர்
நீங்கள் இப் பூமியை விட்டு சென்று ஒரு வருடம் ஓடி விட்டது. ஆனால் இன.னும் நம்ப முடியவில்லை நீங்கள் இவ்வுலகில் இல்லையென.......உங்கள் நினைவுகள் எப்போதும் இருக்கும். மைத்துனன் ரஞ்சன்.