1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
30
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Eslohe வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்ணா பரிமளராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணைப்பதில் தந்தையாய்
இணைப்பதில் தோழனாய்
பிணைப்பிற்கொரு நற்குருவாய்
எமையீர்ந்த நல்லுறவால்
நீ இன்னும் வாழ்கிறாய்
ஊருக்கும் உறவுக்கும்
உழைப்பினை பகிர்ந்து
யாருக்கும் தெரியாமல்
கொடைகளாய் கொடுத்து
நீ இன்னும் வாழ்கிறாய்
மண்விட்டு உனதுடல்
காற்றோடு போனாலும்
பொன்னான உனதுமனம்
கண்விட்டு போகவில்லை
நீ இன்னும் வாழ்கிறாய்
எம்மோடு எம்முன்னே
எம் அருகில் எம்முள்ளே
முத்திரையாய் பதிந்தவனே
என்றும் உன் நினைவான
பரிமளவாசம் எம்முள் வீசும்
தகவல்:
குடும்பத்தினர், நண்பர்கள்
நீங்கள் இப் பூமியை விட்டு சென்று ஒரு வருடம் ஓடி விட்டது. ஆனால் இன.னும் நம்ப முடியவில்லை நீங்கள் இவ்வுலகில் இல்லையென.......உங்கள் நினைவுகள் எப்போதும் இருக்கும். மைத்துனன் ரஞ்சன்.