
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜெகநாதனின் அன்பாலுறை தம்பியான.(BALA Master) தியாகராசா.. ஐயா நினைவாக வரைந்த நினைவுரை...part 2
மூத்த மகன் வாரானோ என்கடனேதும் தீரானோ என்று ஏங்கி உளம் துவண்டு நோய் கண்டு பாயுற்று வாரிசுகள் மறந்து வளமான இப்புவியில் வாழ்ந்தது போதுமினியென்று.... போயிட்ட உந்தன் உயிராள் உயிர் சென்ற பாதை தேடி பறந்தாயோ.. காலனவன் உன் கணக்கு முடித்தானோ... வாழ்ந்தது போதுமினி வாராயோ வீரமனிதா என.. சூரன் உடலறுக்க வீர வாள் அளித்த அன்னை யுடன் ஐயனும் அர்த்தனாரீசுவரராய் அழைத்தாரோ முன் தோன்றி...
பரமனே அழைத்ததால் பார்விட்டு பரிதவிக்கும் உம்மவர் மறந்து.. உயிரமைதி கொண்டிட கோமகனே நீ பிரிந்தாயோ.... பார்புகளாய் வாழ்ந்தவரே...
பரமனடி கண்டாயோ..வேலன் அவன் அன்னை துணைகண்டு ஆத்ம சாந்தி அடைவாயே... நமக்கும்ஒரு நாள் இதுவே விதியென எண்ணியே உறைவோம்... ஓம் சாந்தி சாந்தி அமைதி காண்பாயே அங்கே என்றே இறையது வேண்டினேன் இங்கே உன் மகன் போலே.... எல்லாம் அவன் செயலே...
பாரினில் பிறந்தோர் சேயாகி. பல்உறவாய் பருணமித்து வளர்ந்து... செயற்கரிய செய்து முதிர்ந்து முக்காலமுணர்ந்து முடிவினிலே... முக்கண்ணனடி முத்தி காண்பது முறைதானே... வாழியவே. அங்கே.. ஆவியே அமைதி காணட்டுமே...
Write Tribute