
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திரு தியாகராஜா அவர்களின் மறைவு காரணமான... அவரின் மூத்த மகன் திரு ஜெகநாதன் அவர்களின் நினைவுரை...
அன்பால் வந்தோர்க்கு வணக்கம். ஆதரவு தந்தோர்க்கு வணக்கம். நண்பர்களிற்கு வணக்கம்.. உறங்காத உறவுகளிற்கு வணக்கம்.. என்தந்தை நினைவில் என்னில் எழுந்த வரிகள்...
வானமே எல்லை என் தந்தை வாழ்ந்த வாழ்வின் விழுமியங்கள் வானிலும் உயர்ந்தவை.
மண்ணின் மடியில் இருபத்தி ஒன்பது ஆடி முப்பதில் மலர்ந்து, பதினொன்று கார்த்திகை இருபதில் உதிர்ந்தாரே எம் சொல்லின் செல்வரே ஐயா தியாகராஜா..
கண்ணின் மணியாம் எம் அன்னை யுடன் அன்புறு வாழ்ந்து நம் ஐவரை ஆணுடன் பெண்ணாய் பெற்று பேருடன் வளர்த்து வளம் கண்ட
வண்ண முறை எங்கள் வாரியார் இவரே.. வந்தாரை வரவேற்று வாயார வாழ்த்தி மனதார உபசரித்து உதவிகள் பல செய்திட்ட பரோபகாரர்
தபாலட்சகர் முதல் Red Cross, ஏனைய பல நிறுவன நடத்துனராக கணக்குனராக வலம் வந்த எம் ஐயா.. நான் வரமுடியாத நிலையுணர்ந்தோ உடல் சுருங்கி உளம் வாடி உனை மறந்தாயோ காலனுனை அழைத்தானே அந்த அந்தக காலன் என் கண்ணினில் பட்டால் கண்டகோடரி கொண்டவனை கிழித்திடுவேனே
அருகிருந்து உன் கடன் செய்யா பாவியானேன்..
வருவோம் என்றிருக்க இந்த கொடிய கொரோன வந்தெல்லோ என் வருகையைத் தடுத்ததே.
என்ன நினைத்தாயோ கொண்டவளை நினைத்தாயோ.. என்ன நினைத்தாயோ ஐயா.. நோயது கண்டு பாயதில் வீழ்ந்தாய்
பரமனடி கண்டாயோ.. வேலன் அவன் அன்னை துணைகண்டு ஆத்ம சாந்தி அடைவாயே.. ஐயா
மறக்கமுடியவில்லையே மனதும் துடிக்கிறதே என்செய்வோம்.. இனியொரு பிறப்பது நீ கண்டால் கூட... மீண்டும் என்னுறவதாய் பிறக்க வேண்டும்.. நாமும் ஒருநாள்.. நமக்கும் இது வழியே என்று அமைவோம். ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute