Clicky

மலர்வு 29 JUL 1930
உதிர்வு 12 NOV 2020
அமரர் கோணையா தியாகராசா
வயது 90
அமரர் கோணையா தியாகராசா 1930 - 2020 கொய்யாத்தோட்டம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜெகநாதனின் அன்பாலுறை தம்பியான.(BALA Master) தியாகராசா.. ஐயா நினைவாக வரைந்த நினைவுரை.... தியாகராஜா ஐயா வளமுடன் வாழ்ந்த வனப்புற. மன்னவன். வாழ்வினில் களம் பல கண்டு புகழின் உச்சம் கண்ட புனிதர் அவர்தாம் அச்சம் காணா அவதார புருஷர். பண்போரும் பார்ப்போரும் மெச்சிடவே நேர் கொண்ட பார்வையுடன் வீறு கொண்ட நடையுடன் நெஞ்சில் யார்க்கும் அஞ்சாத வெற்றிப்பாதை கண்ட மன்னவரிவர். அன்னை நாகரட்னத்தை கரம்பிடித்து இல்லற வாழ்வினில் உயர்வு காண மூவருன் இருவருமாய் பிள்ளைகள் தாமடைந்து வாழ்ந்து வரும் காலை மகன்மாருயர்வு கண்டு புலம்பெயர்ந்து சென்றிடவே காலத்தின் கட்டாயமாய் தாலி கட்டியவளும் காலனடி கவர்ந்ததால் மனைவியவள் பிரிந்ததுயரில் துவண்டாலும் நமக்கும் என்றோ விதியிதுவே என உளம் ஆறி மனமுடையாமல் வாழுந்த உத்தமசீலரே. மனமுடன் மக்களீன்ற மாவீரனாய் இந்த ஜெகத்தினில் எம்முடன் எம்முயிராம் அண்ணல் ஜெகனை எமக்களித்த ஏற்றமுடை நாயகனே வாழும்வரை வதனத்தில் எப்பவும் புன்னகை அரசனாய் புலம் பெயரா புண்ணியம் பல செய்து வாழ்ந்த வளமுறை வங்கக்கடலே...தொண்ணூறாம் உனது பிறந்த நாள் கொண்டாடினாய் வீரமகனாகவே.. பிறவிப்பயனிதுவோ... இந்த புவியினில் பலப்பல மக்கள் தொண்டு செய்திட்ட பொன்மனச்செம்மலே.. நீரோ கூறிடாமல் குவலயம் பிரிந்தது தகுமோ ஐயா. பாரினில் பலசேவை கண்டு கண்ணின் கண்ணாடியும் அணிந்திரா வைத்தியசாலையே வாழ்வினில் எட்டியே எட்டிரா வீரமாய் வாழ்ந்திட்ட ஏந்தலே.. எந்தந்தை போன்றவரே.. மூத்த மகன் எழுபதாம் பிறந்தநாளது இன்புறக் காணும் வரை காத்திருந்தாயோ.... ஊரின் மக்கள் மனதிலே உயர் மனிதராய் உள்ளத்தில் இடம் பிடித்தவரே... Part2 continues
Write Tribute

Tributes