லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னி நடராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உன்னைக் காணாத எம் கண்கள்
நித்திரையைத் தொலைத்துவிட்டு
நீரை வடிக்குதம்மா!!
பாசம் வளர்த்த பூமகளே - உந்தன்
நேசம் மறப்பது எவ்வாறு
காலன் வந்து எடுத்தானோ - எங்கள்
இனிய மகளே உன் உயிரை
நற்பண்புகளால் நிறைந்த மகள்
நல் வாழ்வு காட்ட வந்த மகள்
பெரு வாழ்வு வாழ்வாய் என்றிருந்தோம்
இன்று வெறுமையிலே வாடுகின்றோம்...
உன் ஆத்மா பூரண சாந்தி பெற
எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றோம்...
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.