6ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஸ்னி நடராஜா
Anglia Ruskin University , Cambridge BSc Optometry
வயது 22
அமரர் கிருஸ்னி நடராஜா
1997 -
2019
Edmonton, United Kingdom
United Kingdom
Tribute
37
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்னி நடராஜா அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
எம் கண்மணியே நீ எங்கே?
சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கின்றது- எங்கள்
உள்ளங்களில் அழியாத ஓவியமாக!
உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
மொத்தமாக உன்னை
வாரிக் கொடுத்துவிட்டு
விழியோரம் எந் நாளும்
கண்ணீர் சுமக்கின்றோம்!
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்!!!!!
தகவல்:
குடும்பத்தினர்