1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஸ்னி நடராஜா
Anglia Ruskin University , Cambridge BSc Optometry
வயது 22
அமரர் கிருஸ்னி நடராஜா
1997 -
2019
Edmonton, United Kingdom
United Kingdom
Tribute
37
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டன் Edmonton ஐ பிறப்பிடமாகவும், Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கிருஸ்னி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அருமை மகளே!!!
காலை கண்விழித்த நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில்
அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை, நரகமாய் உள்ளது மகளே!!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது
நீ வேண்டும் எங்களுக்கு, உன்னுடன் வாழ்ந்த
அந்த பொக்கிஷமான நாட்கள் மீண்டும் வேண்டும்
தேயாத நிலவாக எங்கள் மனதில் பதிந்தாய்
ஓயாத நினைவுகளை எங்கள் உள்ளத்தில் தந்தாய்
என்றும் உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்