3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
 
                     
        
            
                அமரர் கீர்த்திக் இரவீந்திரன்
            
            
                                    1993 -
                                2019
            
            
                Burgdorf, Switzerland
            
            
                Switzerland
            
        
        
    
                    Tribute
                    11
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
            
        சுவிஸ் Burgdorf ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ajax ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கீர்த்திக் இரவீந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-09-2022
நேற்று நீ இருந்தாய்
உன்னோடு நாமிருந்தோம்
 காற்றொன்று வீசியதாய் 
நினைவிருக்கிறது
 நீ கலைந்துபோன
 கணம் மட்டும்
நினைவில் இல்லையய்யா..!
உயிர் உருக்கும் அந்த கணப்பொழுதை
 நினைக்க மனம் மறுக்குதய்யா
 நீ இருந்த இடமெல்லாம்
நீ நடந்த சாலைகள் எல்லாம்
உன்னை நினைவு படுத்தும்
 நிமிடங்களில் நதிகளும் தோற்கின்றன 
மீட்டும் விரல்களை
தொலைத்த 
வீணைகளாய் நாமிங்கு..
கார் இருளில் கலைந்தவனே..!
நீ எங்கே? 
காலங்கள் கடந்து போனாலும்
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை 
இன்றும் நீ - எம்மோடு
 வாழ்ந்து கொண்டே இருக்கின்றாய்
 என்றும் நீங்காத சோகம்
எம் நெஞ்சங்களோடு
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
                         
                         
                         
                         
                             
                    